பல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்து 100பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 43ஆவது நாடாக விளங்கும் பல்கேரியாவில் இதுவரை மூன்று இலட்சத்து 84ஆயிரத்து 887பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 126பேர் பாதிக்கப்பட்டதோடு 121பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 65ஆயிரத்து 754பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 801பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து நான்காயிரத்து 33பேர் பூரண குணமடைந்துள்ளனர்.