இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ள நிலையில் மருந்து உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
மே ஒன்றாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் மருந்து தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ச்சியாக பல்வேறு அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திவரும் மோடி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை குறித்து விவாதிக்கவுள்ளார்.