துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் மூன்று இலட்சத்து 342பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 54ஆவது நாடாக விளங்கும் துனிசியாவில் இதுவரை பத்தாயிரத்து 304பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 770பேர் பாதிக்கப்பட்டதோடு 73பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 40ஆயிரத்து 892பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 515பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக இரண்டு இலட்சத்து 49ஆயிரத்து 146பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.