குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் மூன்று இலட்சத்து 493பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 50ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில் இதுவரை மூன்று இலட்சத்து 22ஆயிரத்து 626பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆறாயிரத்து 854பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 254பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ள 15ஆயிரத்து 280பேர் அங்குள்ள மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 240பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.