திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, உப்புவெளி பொலிஸ் அதிகார பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை பொலிஸ் அதிகார பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் சீனக்குடா பொலிஸ் அதிகாரா் பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.