இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பலாங்கொடை, எஹெலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, கிரியெல்ல, வெலிகேபொல, இம்புல்பே மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே குறித்த பகுதிகளிலுள்ள மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.