வடக்கு அயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் மே 24ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் உட்புற பகுதிக்குள் செயற்பட முடியும்.
திங்கட்;கிழமை முதல் இரண்டு வீடுகளைச் சேர்ந்த 6 பேரை வீடுகளுக்குள் சந்திக்க அனுமதிப்பது இதில் அடங்கும்.
அமைச்சரின் ஒப்புதலுக்கு உட்பட்டு வெளிநாட்டு பயணங்களுக்கான போக்குவரத்து ஒளி அமைப்பும் அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்.
போர்ர்த்துகல் உட்பட வெளிநாட்டு பயணங்களுக்காக வடக்கு அயர்லாந்தின் பசுமை பட்டியல் என்று அழைக்கப்படும் நாடுகளின் பட்டியலில், பன்னிரண்டு நாடுகள் உள்ளன.
அந்த நாடுகளில் போர்த்துகல் இருப்பதை துணை முதலமைச்சர் மைக்கேல் ஓ நீல் நேற்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தினார்.