நடப்பு ஆண்டுக்கான ஏ.டி.பி. லியோன் பகிரங்க டென்னிஸ் தொடரில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான ஆண்களுக்கான் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், பிரித்தானியாவில் கேமரூன் நோரியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் சிட்ஸிபாஸ், கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், சிட்ஸிபாசுக்கு நோரிஸ் நெருக்கடி கொடுத்து பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அந்த எதிர்பார்ப்புக்களை பொய்யாக்கிய சிட்ஸிபாஸ், இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.