வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார்.
அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், இன்னும் தீர்மானம் ஏற்படவில்லை.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.