தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதுடன் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் கொரோனா தொற்றாளர்கள் ஒரேநாளில் கண்டறியப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 28 ஆயிரத்து 864 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாத்திரம் இன்று இரண்டாயிரத்து 689 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 20 இலட்சத்து 68 ஆயிரத்து 580 பேருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 493 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 23 ஆயிரத்து 754ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 32 ஆயிரத்து 982 பேர் கொரோனா தொற்றிலிருந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்து 39 ஆயிரத்து 280ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்னும் மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 546 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.