இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மேலும் குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 485 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 40 இலட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 56 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 20 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அதேநேரம் 3 ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 29 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.