இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அண்மைய காலங்களில் குறைவடைந்து வருகின்ற நிலையில், தமிழக அரசு புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ஒக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக இருந்தால் அவர் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் ரத்தத்தில் ஒக்சிஜன் அளவு 94 முதல் 90இற்குள் இருந்தால் கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம் எனவும் ரத்தத்தில் ஒக்சிஜன் அளவு 90இற்கும் கீழே குறைந்திருந்தால் மட்டும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
90 இற்கும் கீழ் ஒக்சிஜன் அளவு குறைந்துள்ள நோயாளிகளை ஒக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அதேவேளை மூன்று வகைகளாக நோயாளிகளை பிரித்து சிகிச்சை முறையைத் தொடர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.