அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவத்துள்ளது.
இதன்போது கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது.
இதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதேபோன்று மற்றொரு வாகனத்தில் இருந்த 29 வயது நபர் மற்றும் அவரது 9 மாத கைக்குழந்தை ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். இதனால் விபத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
நடந்த பல வாகன அலபாமா மோதல் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை விசாரித்து வருகிறது.