கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் வைரஸ் தொற்றினால் நான்கு இலட்சத்து 50ஆயிரத்து 512பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 49ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை 12ஆயிரத்து 795பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 794பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 25ஆயிரத்து 159பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 132பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து நான்கு இலட்சத்து 12ஆயிரத்து 558பேர் பூரண குணமடைந்துள்ளனர்.