மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கி, சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனெனில், கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் மாதம் முதல் இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு முறை 100 தொன் ஒட்சிசன் என்ற வீதத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.