சுய முடக்க நிலையை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
கூட்டு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ரஹூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் அமீர் அலி ஆகியோரின் கையெழுத்துடன் குறித்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வைத்திய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் எதிர்வரும் 10 நாட்களுக்கு இதனை செயற்படுத்துமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் மக்களின் உயிர்களை காப்பாற்ற எவ்வித திட்டங்களோ அல்லது தேவையோ இல்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.