தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் இதுவரை பத்து இலட்சத்து ஒன்பதாயிரத்து 710பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 34ஆவது நாடாக விளங்கும் தாய்லாந்தில் இதுவரை எட்டாயிரத்து 826பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 19ஆயிரத்து 851பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 240பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 79பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 615பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து 95ஆயிரத்து 805பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.