தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் மொத்தமாக 80ஆயிரத்து 469பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில் இதுவரை 27இலட்சத்து 22ஆயிரத்து 202பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 251பேர் பாதிக்கப்பட்டதோடு 516பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 67ஆயிரத்து 488பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 24இலட்சத்து 74ஆயிரத்து 245பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.