ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை இந்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக மக்களுக்கு செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.