பல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் 22ஆயிரத்து 4பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 55ஆவது நாடாக விளங்கும் பல்கேரியாவில் இதுவரை ஐந்து இலட்சத்து 31ஆயிரத்து 129பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 327பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 98பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 55ஆயிரத்து 458பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 487பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து 53ஆயிரத்து 667பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.