பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 69இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 69இலட்சத்து 991பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை 71இலட்சத்து எட்டாயிரத்து 206பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 411பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 127பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 89ஆயிரத்து 804பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 49பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.