ரி-20 உலக்கிண்ண தொடரின் 21ஆவது லீக் போட்டியில், ஸ்கொட்லாந்தை வீழ்த்தி நமீபியா அணி, மகத்தான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லீஸ்க் 44 ஓட்டங்களையும் கிறிஸ் க்ரேவ்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நமீபியா அணியின் பந்துவீச்சில், ரூபன் டிரம்பெல்மேன் 3 விக்கெட்டுகளையும் ஜென் பிரைலின்ங் 2 விக்கெட்டுகளையும் ஸ்மிட் மற்றும் வெய்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 110 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நமீபியா அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நமீபியா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்மிட் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும் கிரைஜ் வில்லியம்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், மிச்சேல் லீஸ்க் 2 விக்கெட்டுகளையும் பிரெட்லீ வீல், சப்யான் செரீப், கிறிஸ் க்ரேவ்ஸ் மற்றும் மார்க் வட் ஆகியோர் தலா 1 விக்கெட்iடினயும் வீழத்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரூபன் டிரம்பெல்மேன் தெரிவுசெய்யப்பட்டார்.