கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மொத்தமாக 17ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 45ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் மொத்தமாக எட்டு இலட்சத்து 53ஆயிரத்து 841பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 653பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 89பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 79ஆயிரத்து 487பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 561பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, ஏழு இலட்சத்து 57ஆயிரத்து 342பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.