ஆண்களுக்கே உரித்தான றியோ பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா மற்றும் அர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்;டியில், முதல் செட்டை 6-4 என கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவது செட்டில், டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, 6-2 என செட்டை கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.