விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடாலும், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.
இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், பிரித்தானியாவின் கேமரூன் நோரியை ரபேல் நடால், எதிர்கொள்ளவுள்ளார்.