பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று ‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடாலும், நோர்வேயின் கேஸ்பர் ரூட்டும் பலப்பரீட்சை நடத்தினர்.
ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய நடால், 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் 14ஆவது முறையாக பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்; சம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன், இது அவருக்கு 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.