இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் 76 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மஹாராஜ், நோட்ஜே, பார்னல் மற்றும் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 212 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஸ்ஸி வெண்டர் டுஸன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டேவிட் மில்லர் தெரிவுசெய்யப்பட்டார்.