நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தாங்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரும் நாட்கள் மற்றும் வாரங்கள் கடுமையானவையாக இருக்கும் என்ற அரசாங்கத்தின் எச்சரிப்பைக் கேட்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கம் சரியான உத்தரவாதத்தை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.