இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அதனை அண்மித்த கரையோரங்களிலும் பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதப்படையினரை அழைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வரவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து வெளியிடப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.