தடகள வீரர் யுபுன் அபேகோனுக்கு வருடாந்தம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அனுசரணையினை இரண்டு வருடங்களுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய யுபுன் அபேகோனுக்கு இரண்டு வருடங்களுக்கு அனுசரணையாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் அபேக்ஷா வைத்தியசாலைக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.