கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனியின் வீட்டை தாக்கி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மீரிகம – ஹல்பே பிரதேசத்தில் வைத்து அதே பிரதேசத்தில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், குளியாபிட்டிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் சரத் இந்துனிலின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கிரிந்தாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மஹர பிரதேச சபை உறுப்பினர் அனுஷா தில்ருக்ஷியின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கடவட – சூரியபாலுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பொலிஸ் சீருடைகள் மற்றும் சில பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.