தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னாள் போராளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) குறித்த நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் கலந்து கொண்டிருந்ததுடன் தெரிவு செய்யப்பட்ட 40 முன்னாள் போராளிகளிற்கு உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.