மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவாவும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், இத்தாலியின் ஜென்னிக் சின்னரும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, கஸகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதினார்.
இப்போட்டியில், செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 7(16)-6(14), 6-2, நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.