அயர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
டாக்கா மைதானத்தில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 369 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
155 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக் கிரிக்கெட் அணி, 292 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதற்கமைய அயர்லாந்து அணி, பங்களாதேஷ் அணிக்கு 138 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 126 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட முஷ்பிகுர் ரஹீம் தெரிவுசெய்யப்பட்டார்.