சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் வெற்றிடமாக உள்ள இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க இன்றைய கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர வெற்றிடமாக உள்ள பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை நியமிப்பது தொடர்பான பரிந்துரையும் இன்றைய அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்புப் பேரவைவை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு இன்றைய கூட்டத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.