மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய் பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள்நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருவதாகக் கூறி 22 பேரிடம் தலா 4,50,000 ரூபாய் என சுமார் ஒருகோடி ரூபாயை மோசடி செய்துள்ளார் எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து அமிர்தகழி பிரதேசத்திலுள்ள குறித்த போலி முகவரின் வீட்டை நேற்றைய தினம் (13) கொழும்பில் இருந்து வந்த வேலைவாய்ப்பு பணியகத்தினர் மட்டக்களப்பு தலமையக பொலிஸாரின் உதவியுடன் முற்றுகையிட்டு அவரைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.