பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வோஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் அனுப்பிய இரகசிய தகவலை இம்ரான் கான் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.