ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 7 ஆம் திகதி அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை,புதுடெல்லியில் எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 8ம் திகதி இந்திய பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஜி20 மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமை என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.