அடுத்த மாதம் 4 முதல் 15 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியான ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.
தனக்கு பிடித்த தொடர்களில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியும் ஒன்று என குறிப்பிட்டுள்ள நோவக் ஜோகோவிச், எதிர்காலத்தில் மீண்டும் சீனாவுக்கு வந்து விளையாட ஆசைப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
சின்சினாட்டியில் தனது 39வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற நோவக் ஜோகோவிச், கடந்த வாரம் நடைபெற்று முடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸில் தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார்.
36 வயதான நோவக் ஜோகோவிச் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற நிட்டோ ஏடிபி இறுதிப் போட்டி உட்பட ஷாங்காய் போட்டியில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.