மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.