சீன அரசின் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் நிர்மாணப்பணிக்கள் இடம்பெறும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.ஐ.எம்.றஹீம் மற்றும் பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.