இந்திய கலாச்சாரத்தின் மரியாதையை நிலைநாட்ட பாஜக அச்சமின்றி உழைத்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சி எப்போதும் ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலை செய்துவருகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
ராஜஸ்தானின் ஜைதரன் என்ற இடத்தில் பாஜக சார்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இதேவேளை ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரம் இல்லாத மாநிலமாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.