அவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் ரி-20 லீக் தொடரில் இருந்து, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் விலகுவதாக அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் வரவிருக்கும் 13ஆவது பிக் பேஷ் லீக் தொடரில் ரஷித் கான் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏழு ஆண்டுகளாக எங்களுடன் இருந்த அணியின் இசிகர்களின் விருப்பமான ரஷித், இந்த கோடையில் விளையாடமாட்டார் என அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் கிரிக்கெட்டின் பொது மேலாளர் டிம் நீல்சனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ட்ரைக்கர்ஸ் இன்னும் ரஷித்திற்கு மாற்றாக எந்தவொரு வீரரையுமு; அறிவிக்கவில்லை என்றாலும், அணி எதிர்கால சீசன்களில் ரஷித்தின் தக்கவைப்பு உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் பிபிஎல் தொடரில், அறிமுகமான ரஷித் கான், 69 போட்டிகளில் 17.51 சராசரியிலும், 6.44 என்ற ஓட்ட வீதத்திலும் 98 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மெல்போர்ன் ஸ்டார்ஸின் ஹாரி புரூக் தனது பணிச்சுமை காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது ரஷித்தும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு பிக் பேஷ் ரி-20 லீக் தொடர், எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தமாக 61 போட்டிகள் நடைபெறவுள்ளன.