• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்! -மு.க.ஸ்டாலின்

விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்! -மு.க.ஸ்டாலின்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/12/29
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

தேமுதிக தலைவரும்,  நடிகருமான  ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த்‘  கொரோனாத்  தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் ”விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது  X தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது

”அன்பிற்கினிய நண்பர் – தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.

நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.

தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது.

blank

அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன்.

இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.

இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related

Tags: புரட்சி கலைஞர்' விஜயகாந்த்மு.க.ஸ்டாலின்விஜயகாந்த்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது தொடர்பாக ஜப்பானை எச்சரிக்கும் ரஷ்யா

Next Post

நடிகர் விஜயகாந்தின் இழப்பானது தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்! -செந்தில் தொண்டமான்

Related Posts

ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!
இங்கிலாந்து

ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!

2026-04-03
சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!
இங்கிலாந்து

சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

2026-04-03
தனியார் வங்கிகளில் கணக்குகளை திறக்க அரச நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அரசு செலவினங்களை நிர்வகிக்க சுற்றறிக்கை!

2026-04-03
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!
இலங்கை

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

2026-04-03
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!
இலங்கை

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

2026-04-03
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!
இந்தியா

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

2026-04-03
Next Post
நடிகர் விஜயகாந்தின் இழப்பானது தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்! -செந்தில் தொண்டமான்

நடிகர் விஜயகாந்தின் இழப்பானது தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்! -செந்தில் தொண்டமான்

மறைந்தும் வாழும் சொக்கத்தங்கம் கேப்டன்

மறைந்தும் வாழும் சொக்கத்தங்கம் கேப்டன்

சூடானில் அதிகரிக்கும் பதற்றம்: 253 குழந்தைகளைக் காப்பாற்றிய  UNICEF

சூடானில் அதிகரிக்கும் பதற்றம்: 253 குழந்தைகளைக் காப்பாற்றிய  UNICEF

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
edit post
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

0
edit post
ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!

ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!

0
edit post
சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

0
edit post
கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

0
edit post
உகாண்டா: ஆரம்பப் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி சம்பவம்…

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.