ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழில். தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் குறித்த நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொண்டமைக்கான செலவு விபரங்களை யாழில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக கேட்டிருந்த நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இன்றை தினம் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள போது , அதற்கான செலவீனங்களை சமாளிக்க முடியாத அளவுக்கு திணைக்களங்கள் திண்டாடுவதாகத் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.