திடீர் காய்ச்சலினால் மாணவியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 7 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.