ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியிருந்தன
அதன்படி போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ஓட்டங்களை எடுத்திருந்தார்
இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடிய தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டனர்
இன்னியில் 9.4 ஓவர்களிலேயே 167 ஓட்டங்களை அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.