பூட்டிய வீட்டில் இருந்து ஐவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,தந்தை, மகன், மகள், பேத்தி ஆகிய ஐவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளர்.
கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்துள்ளனர் என முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.