கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.கவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகுதியில், 33997 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுவரும் நிலையில், தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 26741 வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் கோயம்பத்தூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.