நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளன.
மேலும் லிட்ரோ மற்றும் லாப் ஆகிய நிறுவனங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிவாயு கொள்கலன்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டிருந்த பின்னனியில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.